உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Friday, 16 June 2017

எனக்கு நீ போதும்


எனக்கு நீ போதும்...
****
இனியொரு இடம்
புதிதாய் வேண்டாம்
நீ எங்கிருந்தாலும் ரசிப்பேன்,,,
ஒப்பனைகள் ஒன்றும்
தேவை இல்லை
சோம்பல்கள் கூட
உனக்கு அழகுதான்...
புதிய உடைகள்
அவசியம் இல்லை
உன் வாசனைகள்
நிறைந்த பழைய நினைவுகளே போதும் ..,,,
வசதி இருந்தாலும்
எனக்கு வேண்டாம்
உன் தோளில்
சாய்ந்து கொள்ள
கொஞ்சம் இடம் கொடு
அது போதும்,,,
வாகனங்கள் ஏதும்
வாக்காய் இல்லை,,,
பொடிநடையாய்
நடப்போம்
விடியும் வரை...
ஆயிரம் கண்கள்
கடந்து செல்ல,,,
இயற்கை எல்லாம்
நகர்ந்து செல்ல,,,
இமைகள் கூட
உறக்கம் தேட
இமைக்காமல்,,,
என் அழகியே
உன்னைமட்டும்
ரசிப்பேனடி 

No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

110024