உங்கள் படைப்புகளை அனுப்ப இங்கே சொடுக்கவும்

Sunday, 25 June 2017

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழி ( Divya -26/06/2017)





வரிகளால் எனக்கு 
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....
இருந்தாலும் வாழ்த்து 
சொல்ல என் மனம் துடிக்கிறது...
பூக்களை தூதாக அனுப்பி 
உனக்கு வாழ்த்து சொல்லலாம் 
என்றால் உன் அழகில் அவை மெய்மறந்து போய்விடும் ...
அதனால் தான்
என் மனதின் வரிகளால் வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...
உன்னுடன் பழகிய நாட்களில் 
உன் மனம் வருந்தும்படியாக நடந்திருந்தால் 
உன் பிறந்த நாளான இன்று 
என்னை மன்னித்துவிடு....
எத்துனை துன்பம் 
வந்தாலும் 
கண் கலங்காதே 
வரும்காலம் 
நலமாய் 
இருக்கும்
இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை 
இறங்கி வந்த நாள்..
பூவுலகின் தேவதைக்கு
இன்று பிறந்தநாள்!
வாழ்த்துக் கூற வார்த்தைகளைத்
தேடுகின்றேன்
வரிகளே அமையவில்லை.
உனக்கு பரிசளிக்க
ரோஜாவைப் பறிக்க சென்றால் .,
மலர்ந்து விட்ட ரோஜாவுக்காக
மலரப்போகும் என்னை பறிக்காதே என்றது .
கவிதை என்றால்
பொய் அல்ல என்று மாற்றிய
உன் அழகுக்கும் வயதுக்கும்
எனது நெஞ்சார்ந்த 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

Thanks for visiting our site

Widgets

அதிகம் படித்தவை

பார்வையாளர்கள்

109872