அழகெல்லாம்
அசந்து போகும்
அழகி நீயடி...!!
ஏன் இந்த வாழ்க்கை என
ஏங்கிய போது நீ வந்தாய்
உன்னால்
ஏழு உலகமும் பெற்றேன்
ஓவியமே உன்னை எண்ணி
ஓயாமல்
என் இதயம்
ஓய்வின்றி துடிக்கிறது...!!
உன் அன்பு கடல் போல என தெரியாமல்
என்னை இழந்துவிட்டேன்
..
முட்கள் நிறைந்த
என் வாழ்க்கையில்
நீ மட்டும் எப்படி ரோஜாவாக...??
சொர்க்கத்தின் வாசலும்
நரகத்தின் வாசலும்
உன் கண்களில் தான்....
பூக்கள் உன்னை பார்த்து
பேசிக்கொள்கின்றன
தினம் நாம் பூத்து
உதிர்கிறோம்
இவள் உதட்டில்
உதிர்ந்தால்
பூத்துவிடலாம் என்று..
சூரியனை மட்டும்
சுற்றும்
சூரிய காந்தி போல்
உன்னை மட்டுமே
நான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்
என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
பூக்களும் தேவதையும , பட்டாம்பூச்சிகளின் தேவதையும் நீதானடி
No comments:
Post a Comment
Thanks for visiting our site