நிலத்தில் விழுந்த சாரல் துளி போல உன்னை என்னில் பத்திரபடுத்திவிட்டேன் ..
எல்லோரையும் நனைத்துவிட்டு செல்லும் மழை உன்னை மட்டும் ரசித்து விட்டு செல்கிறது. .
வானில் கோடி நட்சத்திரங்களை விட மழையில் நனைந்த உன் முகம் எவ்வளவோ அழகுடி
மழைக்காக காத்திருக்கும் விதைகள் போல உன் முகம் காண தவிக்கிறேன்
...
தாமரை இலையில் மழைத்துளியை காணும் போதெல்லாம் உன் ஒப்பனையற்ற முகம் தான் மனதில் வந்து போகிறது. .
மழையில் நனையும் போதும் , உன் நினைவுகளில் உருகும் போதும் பைத்தியமாகி விடுகிறேன் ..
சீக்கிரம் என்னை சேர்ந்துவிடு அன்பே
No comments:
Post a Comment
Thanks for visiting our site